Less than a minute

it-sertifikat

சுய மதிப்பீடு

இந்த உலகில் ஒரு மனிதன் உயிர்வாழ, அவனுக்கு முதலில் நம்பிக்கைஅவசியம். மேலும், அவன் தன்னை தானே உணர்ந்து, தனது சுய வலிமைஎன்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். ஒரு மாணவர், தன்னைத்தானேஅறிந்திருப்பதோடு, தன்னால் என்ன செய்ய முடியும், தனக்குள்ளதிறமைகள் என்னென்ன, தன்னால் அதிகபட்சமாக என்ன சாதிக்க முடியும்? என்பதைப் பற்றி கட்டாயம்அறிந்திருக்க வேண்டும்.

5இணைய வழிக் கற்றல்

இணையம் இன்று ஒரு பல்லூடகக் கருவியாக பரிணமித்து இருக்கின்றது. எழுத்துரு, படங்கள், அசைவுப்படங்கள், நிகழ்ப்படங்கள், ஒலி ஒளி சேர்க்கைகள், இணைய உரையாடல், நிகழ்ப்படக் கருத்தரங்கு, வானொலி, தொலைக்காட்சி எனப் பன்முகப் பயன்பாடுகளைக் கொண்டதாக விளங்குகின்றது. இவை அனைத்தும் தற்கால நவின முறையிலான கற்றல் கற்பித்தலுக்கு மிகவும் ஏற்றவை மட்டுமல்ல, எளிமையாகப் பயன்படுத்தக்கூடியவை.

10தொழில் நுட்பங்கள்

பள்ளிக்குத் தேவையான சரியான தொழில்நுட்பக் கருவிகளைத் தேர்ந்தெடுப்பது, கல்வி மேம்பாட்டிற்கு, தகவல் தொடர; நுட்பங்களைப் பயன்படுத்துவதின் முக்கியப் படி. இந்தப்பிரிவில், கல்வி முறையில் பயன்படுத்தக்கூடிய தொழில் நுட்பங்கள் மற்றும் தகவல் தொடர்பு நுட்பங்களைப் பயன்படுத்துவதிலுள்ள பிரச்சனைகளைப் பற்றிப் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலைப் புதிய இலக்கு நோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் கல்வியாளர்களுக்கும் கணிஞர்களுக்கும் இருக்கின்றது. ஆகவே, உலக உருண்டையில் தமிழும் தமிழ்க் கல்வியும் நிலைபெற வேண்டுமானால், இணையம் வழியாகவும் இணைய ஏந்துகளின் வழியாகவும் தமிழைக் கற்கவும் கற்பிக்கவும் வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை உணர்ந்து, தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் தமிழைக் கற்கும் அல்லது கற்க விரும்பும் மாணவர்களும் இனையத்தையும் இணைய ஏந்துகளையும் பயன்படுத்த முன்வர வேண்டும்.
இக்கற்பித்தல் முறையில் ஓர் ஆசிரியர், ஒரு மாணவர் என்ற கற்றல் நிலை பின்பற்றப்படுகிறது. இதன்மூலம் மாணவரின் கவனம் சிதறாமல் தடுக்கப்படுகிறது. நடப்பில் உள்ள வகுப்பறைகளைப் போல நூறுபேருக்கு ஓர் ஆசிரியர் என்ற தொல்லை இக்கற்பித்தல் முறையில் இல்லை. மேலும் தேவையான நேரத்தில் பாடங்களைப் படித்துக்கொள்ளலாம். இரவு பகல் என்ற நேர எல்லை இல்லை. இக்கற்பித்தல் முறையில் திரும்பத் திரும்பப் கற்ற பாடங்களையே பார்வையிடலாம். சொல்லித்தருபவருக்கு சலிப்பு வரும் என்ற நிலை இல்லை.

தமிழில் கல்வியின் மேன்மைகள்

      • மாணவர்கள் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
      • ஒன்றைப் பற்றிய மேலதிக தகவலை அறிந்துகொள்ளும் வகையில் தொடுப்புகளைக் (hypelinks) கொண்டிருக்கிறது.
      • வெவ்வேறு ஆற்றலும் விருப்பமும் கொண்ட மாணவர்கள் தாங்கள் விரும்பும்வகையில்  கற்பதற்கு வாய்ப்பினை வழங்கிகின்றது.
      • மாணவர்களின் கற்றல் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.
      • தனியாகக் கற்பதற்குரிய (individualise learning) வாய்ப்பு கிடைக்கிறது.
      • எழுத்து (text), ஒலி (sound), காட்சி (visual), அசைவுப்படம் (graphics),நிகழ்ப்படம் (video), உடலியக்கம் (psychomotor), இருவழித் தொடர்பு (interactive) எனப் பலதரப்பட்ட வகையில் கற்பதற்குரிய சூழல் இருக்கின்றது

வாங்க படிக்கலாம்